2009-10ஆம் கல்வியாண்டில் 12,058 ஆசிரியர்கள் நியமிக்க திட்டம்: தங்கம் தென்னரசு

சென்னை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:42 IST)
நடப்புக் (2009-2010) கல்வியாண்டில் 12,058 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர், 2009-10ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மாநகராட்சி பள்ளிகள் (சென்னை, மதுரை, கோவை) மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 12,058 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சுமார் 5,000 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஊரக நூலகங்களில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தி படிக்கும் வழக்கத்தை மாணவர்களிடத்தில் மேம்படுத்திட, அந்த ஊராட்சிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ‘நூலக வகுப்ப’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படும். இது அடுத்த 2 ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட கல்வி அலுவலகம் புதிதாகத் துவக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :