15ஆம் தேதி 10ஆம் வகுப்பு, மெட்ரிக். மதிப்பெண் பட்டியல் விநியோகம்

செ‌ன்னை | Webdunia| Last Modified வெள்ளி, 12 ஜூன் 2009 (12:01 IST)
பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களுக்கு, வரும் 15ஆம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அனைத்து தேர்வு மையங்களுக்கும் மதிப்பெண் பட்டியல்கள் தபாலில் அனுப்பும் பணி தொடங்கியது.

பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வுகளில் பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்களாகவும் 9,45,467 மாணவ- மாணவிகள் எழுதினர். மே 23ஆம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

வரும் 15ஆம் தேதி, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படு‌ம் எ‌ன்று‌ம் தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று‌ம் அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்தது.
இந்நிலையில், மதிப்பெண் பட்டியல்கள் அச்சடிக்கும் பணிகள் கடந்த வாரம் முடிவடை‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகள் மற்றும் தனித் தேர்வு மையங்களுக்கும் மதிப்பெண் பட்டியல்களை தபால் மூலம் அனுப்பும் பணியை அரசுத் தேர்வுகள் துறை தொடங்கி விட்டது.

14ஆம் தேதி‌‌க்கு‌ள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் மதிப்பெண் சென்று சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு ‌விடு‌ம். இதை‌த் தொட‌ர்‌ந்து 15ஆம் தேதி காலை 10 மணிக்கு மதிப்பெண் பட்டியல் வழ‌ங்க‌ப்படு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :