10, 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

புதுடெல்லி| Webdunia| Last Modified சனி, 24 அக்டோபர் 2009 (19:09 IST)
நடப்பு கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ கல்விமுறையில் பயிலும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி துவங்கும் என சி.பி.எஸ்.இ. தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பீடுகளை மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறையில் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அகில இந்திய அளவிலான பொறியியல் தேர்வுகளை அடுத்தாண்டு ஏப்ரல் 25ஆம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :