10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளி‌யீடு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
கடந்த ஜுலை மாதம் நடத்தப்பட்ட 10ஆ‌ம் வகு‌ப்பு, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இ‌ன்று வெ‌ளி‌யிட‌ப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தே‌ர்வு முடிவுகளை dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in, pallikalvi.in ஆகிய இணைய தளங்களில் மாணவ, மாண‌விக‌ள் பார்த்துக் கொ‌ள்ளலா‌ம். மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 11, 12, 14ஆம் தேதிகளில் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மறுகூட்டல் விண்ணப்பங்கள் வரு‌ம் 17ஆ‌ம் தே‌‌தி முதல் 19ஆ‌ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் (சென்னை நீங்கலாக), நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்படும்.
10ஆ‌ம் வ‌கு‌ப்பு, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வரு‌ம் 19ஆ‌ம் கடைசி நாளாகு‌ம். 2 தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் மறுகூட்டல் கட்டணம் ரூ.305 ஆகும். ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :