10ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு ஹால் டிக்கெட் மையம்

செ‌ன்னை | Webdunia| Last Modified வெள்ளி, 13 மார்ச் 2009 (09:45 IST)
10ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு ஹால் டிக்கெட் வழ‌ங்க‌ப்படு‌மஇட‌த்தஅரசதே‌ர்வுக‌ளதுறஅ‌‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாஅரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்‌பி‌ல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு 16ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. அவரவர் கொடுத்த முகவரியின் அடிப்படையில் அருகில் உள்ள மையங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்வி மாவட்டங்களில் உள்ள தனித் தேர்வர்களுக்குரிய ஹால் டிக்கெட் வினியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.

செங்கல்பட்டு கல்வி மாவட்டம் - அறிஞர் அண்ணா முனிசிபல் உயர்நிலைப் பள்ளி
காஞ்சிபுரம் - டாக்டர் பி.எஸ்.எஸ்.மேனிலைப் பள்ளி

பொன்னேரி - டிவிஎஸ் மேனிலைப் பள்ளி மீஞ்சூர்,

திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மேனிலைப் பள்ளி,

தென்சென்னை - மதரசா-ஐ-ஆசாம் மேனிலைப் பள்ளி,

மத்திய சென்னை - சாவித்திரி அம்மாள் ஓரியன்டல் மேனிலைப் பள்ளி மயிலாப்பூர்,
கிழக்கு சென்னை - ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி சூளைமேடு,

வடசென்னை - பெண்டிக் மேனிலைப் பள்ளி வேப்பேரி.

ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் உடனடியாக அரசு தேர்வுகள் துறையை தொடர்பு கொள்ள வேண்டும் எ‌ன்றகூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :