ஹா‌ர்வர்ட் ஆசியாவிற்கு வராது: நித்தின் நோரியா

Webdunia|
அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்கு வரவேற்க மத்திய அரசு தயாராகிவிட்ட நிலையில், உலகின் முன்னணி வணிகப் பள்ளியான ஹா‌ர்வர்ட், ஆசியாவில் தங்களுடைய பள்ளியின் கிளைகள் திறக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அறிவித்துள்ளது.

ஹா‌ர்வர்ட் வணிகப் பள்ளியின் (Harvard Business School) தலைவராக இந்தியாவில் படித்துத் தேர்ந்த நித்தின் நோரியா பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அப்பால் பிறந்த, கல்வி கற்ற ஒருவர் ஹாவர்ட் வணிகப் பள்ளியின் தலைவராவது இதுவே முதல் முறையாகும். நித்தின் நோரியா மும்பை ஐஐடியிலும், பிறகு எம்ஐடியிலும் கற்றவர்.
இவர் ஹாங்காங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹா‌ர்வர்ட் வணிகப் பள்ளியின் கிளையை ஆசியாவில் திறக்கும் திட்டமேதுமில்லை என்று கூறியுள்ளார்.

“ஆசியாவில் பள்ளியின் கிளையைத் திறக்கும் அவசியம் ஏதுமிருப்பதாக நாங்கள் கருதவில்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை. நாங்கள் அறிவை நோக்கித்தான் ஒடுகிறோமே தவிர, தேவையை நோக்கியல்ல. ஆசியாவைப் பொறுத்தவரை ஒரு சில ஆய்வு மையங்களைத் திறந்து கால் பதிக்கும் எண்ணம் மட்டுமே உள்ளது” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :