ஹன்னாம் பல்கலையுடன் எஸ்.ஆர்.எம். ஒப்பந்தம்

Webdunia|
மாணவர்களையும், துறைப் பேராசிரியர்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம், தென் கொரியாவின் ஹன்னாம் பல்கலையுடன் கையெழுத்திட்டுள்ளது.

அறிவியல், பொறியியல் கல்வியிலும், மின்னணு, கணினி வன்பொருள் ஆய்விலும் முன்னணியில் உள்ளது ஹன்னான் பல்கலைக்கழகம். ஹன்னான் பல்கலையின் தலைவர் முனைவர் ஹியூங்டே கிம், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கு வந்துள்ளார்.

அவருடன் எஸ்.ஆர்.எம். பல்கலையின் பதிவாளர் என்.சேதுராமன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இப்புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் ஹன்னான் பல்கலை மாணவி ஜியே கிம் இங்கு ஆங்கில மொழியையும், இதழியலையும் பயின்று வருவதாக சேதுராமன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இரண்டு மாணவர்களை ஹன்னான் பல்கலைக்கு அனுப்பப் போவதாகவும் சேதுராமன் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :