வேளாண்மை பட்டப்படிப்பு வகுப்புகள் ஜூலை 22இல் துவக்கம்

கோவை| Webdunia| Last Modified புதன், 24 ஜூன் 2009 (12:21 IST)
வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை 22ம் தேதி துவங்கும் என கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்துள்ளார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் வேளாண் இளநிலை அறிவியல், இளநிலை தொழில்நுட்ப பாடப் பிரிவில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.

தமிழகம் முழுவதும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,721 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. நேற்று துவங்கிய முதற்கட்ட கலந்தாய்வு வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாணவர் சேர்க்கை சான்றிதழை துணைவேந்தர் முருகேசபூபதி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் படிப்பில் சேர மாணவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. வேளாண் படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ராகிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமஎன்றார்.


இதில் மேலும் படிக்கவும் :