வேலை வாய்ப்பு ப‌திவு சிறப்பு முகாம்

Webdunia| Last Modified திங்கள், 25 மே 2009 (12:22 IST)
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைக் கல்வி (பிளஸ்-2) தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களின் கல்வி சான்றிதழ்களை வேலைவாய்ப்பிற்காக புதிய பதிவு மற்றும் கூடுதல் பதிவு செய்ய இன்று (25.5.09) முதல் 29.5.09 வரை வேலைவாய்ப்பு பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்தில் வசிப்பவர்கள் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர் வட்டத்தில் உள்ள‌வ‌ர்களு‌ம், திருவொற்றியூர், மணலி, சோழவரம், மாதவரம் போன்ற பகுதியில் உள்ளவர்கள் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் திருவள்ளூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்ய வரும்போது தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் சாதி சான்றிதழ், அசல் குடும்ப அட்டை மற்றும் நகலுடன் வந்து பதிவு செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் கோ.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :