வி‌திமுறைகளை ‌மீ‌றினா‌ல் அ‌ங்‌கீகார‌ம் ர‌த்து : தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. எ‌‌ச்ச‌ரி‌க்கை

செ‌ன்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
வி‌திமுறைகளை ‌மீறு‌மத‌னியா‌ரபொ‌றி‌யிய‌லகல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியும், அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் எ‌ன்று அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ( ஏ.ஐ.சி.டி.இ.) எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

பொ‌றி‌யிய‌லகல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்காக கல‌ந்தா‌ய்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் `கட் ஆப் மார்க்' அடிப்படையில் அழைக்கப்பட்டு தங்களுக்கு விருப்பமான கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்கிறார்கள். பொதுவாக புகழ்பெற்ற தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் கல‌ந்தா‌ய்வு தொடங்குவதற்கு முன்பாகவே நிரம்பிவிடும்.
கல‌ந்தா‌ய்‌வி‌ல் விரும்பிய கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற பயத்தில் இருக்கும் பல மாணவர்கள் தற்காப்புக்காக புகழ்பெற்ற பொ‌றி‌யிய‌ல் கல்லூரி ஒன்றில் முன்கூட்டியே பணத்தை செலுத்தி இடத்தை `புக்கிங்' செய்து விடுவார்கள். பொ‌றி‌யி‌யி‌ல் கல‌ந்தா‌ய்வு மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கல்லூரியிலோ இடம் கிடைக்கும் மாணவர்களுக்கு அவர்கள் புக்கிங் செய்திருந்த கல்லூரி நிர்வாகம் கட்டணத்தொகை திருப்பிக்கொடுப்பதில்லை என்றும், சான்றிதழ்களை கொடுக்கவும் இழுத்தடிப்பதாகவும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.) தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் வசதிக்காக ஏ.ஐ.சி.டி.இ. புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஒரு கல்லூரியில் சேருவதற்காக கட்டணம் செலுத்திவிட்டு வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக வேறு கல்லூரியில் இடம் கிடைத்து செல்லும் மாணவர்களுக்கு அந்த கல்லூரி நிர்வாகம் முழு கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். பரிசீலனை கட்டணமாக வேண்டுமானால் அதிகப்பட்சமாக ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்துகொள்ளலாம். கல்வி சான்றிதழ்களை உடனடியாக ஒப்படைத்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்களை இழுத்தடிக்கக் கூடாது.
இவ்வாறு மாணவர்கள் மாறிச்செல்லும்போது ஏற்படும் காலி இடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியும், அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்து புகார் வந்தாலோ அல்லது ஏ.ஐ.சி.டி.இ. கவனத்திற்கு தெரிய வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :