விருந்தோம்பல் படிப்பு : மே 9ல் நுழைவுத் தேர்வு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:40 IST)
விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம் என்ற 3 ஆண்டு படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 9ல் நடைபெறுகிறது.

தரமணியில் உள்ள ஓட்டல் மேலாண்மை தொழில்நுட்ப மைய முதல்வர் ராஜமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்ப மையம் ஆகியன இணைந்து, விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம் என்ற 3 ஆண்டு பி.எஸ்சி. படிப்பை வழங்குகின்றன.

பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். இதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) மே 9ஆம் தேதி நடக்கிறது.
2009 - 10ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தேசிய மையத்தின் இணைப்பு மையங்கள், கனரா வங்கி கிளைகளில் கிடைக்கும்.

டபிள்யுடபிள்யுடபிள்யு.என்சிஎச்எம்சிடி.ஓஆர்ஜி என்ற இணையதளத்தில் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பத்தின் விலை ரூ.800 (எஸ்.சி., எஸ்.சி. ஊனமுற்றோருக்கு ரூ.400). விண்ணப்பங்களை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தேசிய மையத்திற்கு அனுப்ப வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :