லண்டனில் நடந்த விவாதப் போட்டியில் புனே மாணவர்கள் வெற்றி

FILE

Webdunia|
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த பிரபல விவாதப் போட்டியில் புனேவைச் சேர்ந்த எஸ்.எம்.சோக்ஸி பள்ளி மாணவர்கள் (SM Choksey High School and Junior College) முதலிடம் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இங்கிலாந்து பள்ளிகள் அளவிலான போட்டிகளில் புகழ்பெற்று விளங்கும் UK Debating Matters விவாதப் போட்டியில், புனே எஸ்.எம்.சோக்ஸி பள்ளி மாணவர்களான ஷிவானந்த் அம்பலவாணன், அவுசிடா இரானி, விக்னேஷ் குன்டேஷா, மிரனாள்னி ஷின்டே ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 5ஆம் தேதி நடந்த இறுதிச்சுற்றில், “மக்களுக்கு சமூக சுதந்திரம் அளிப்பதற்கு முன்பாக அவர்களை பயங்கரவாதத்தில் இருந்து காக்க வேண்டும” என்ற தலைப்பிலான விவாதம் நடந்தது. இதில் புனே பள்ளி மாணவர்களின் கருத்துகள் நடுவர்களைக் கவர்ந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாக பிரிட்டிஷ் கவுன்சில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :