மே 8ஆ‌ம் தேதி பிளஸ் 2 தே‌ர்வு முடிவு?

Webdunia| Last Modified திங்கள், 13 ஏப்ரல் 2009 (18:08 IST)
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மக்களவை தேர்தலுக்கு முன் வெளியிடுவது பற்றி அரசு தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. அதனா‌ல் மே 8ஆ‌ம் தே‌தி தே‌ர்வு முடிவு வெ‌ளி‌யிட‌ப்படலா‌ம் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மாதம் 28ஆ‌ம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி 54 மையங்களில் தற்போது நடந்து வருகிறது. இ‌ந்த ப‌ணி வரு‌ம் 22ஆம் தேதி முடிகிறது.

மக்களவை தேர்தல் மே 13ஆம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 16ஆம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாகவே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவும், மதிப்பெண் பட்டியலை உடனே வழங்குவது குறித்தும் தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.
கடந்த ஆண்டு மே 10ஆ‌ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இம்முறை மே 8 அல்லது 9ஆம் தேதி பிளஸ் 2 தே‌ர்வு முடிவு வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :