முதுநிலை மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

சென்னை| Webdunia|
ஜனவரி 10ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் தினம் என்பதால் அன்றைய தினத்தில் நடத்துவதாக அறிவித்த முதுநிலை மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தியில், “வரும் ஜனவரி 10ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்படும். அன்றைய தினம் நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளதால், முகாம்களில் சேவையாற்று மாணவ, மாணவிகள் அதனை எழுத முடியாமல் போகும்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இத்தேவை வேறொரு தேதிக்கு தள்ளி வைத்திட வேண்டும் என மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும” எனக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :