முதுநிலை படிப்புக்கு மே 30ல் நுழைவுத் தேர்வு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:40 IST)
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 30 மற்றும் 31ம் தேதி நடக்க உ‌ள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திக் குறிப்பில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலைப் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு மே மாத‌ம் 30 மற்றும் 31ம் தேதி நடக்கிறது.
சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வுக‌ள் நடக்கி‌ன்றன. இந்த தேர்வை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்துகிறது. இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :