முதுநிலைப் படிப்புகளை நேரடிக் கல்வி முறையில் வழங்குகிறது IGNOU

புதுடெல்லி| Webdunia|
சில குறிப்பிட்ட முதுநிலைப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நேரடிக் கல்வி முறையில் வழங்கி வருவதாக அதன் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று நடந்த IGNOU பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், கல்வி அளிப்பத்தில் சர்வதேச முறையை புகுத்தும் விதமாக, மாணவர்களுக்கு எளிதான வகையில் 3 முறைகளில் (தபால் வழி, நேரடிக் கல்வி, ஆன்-லைன்) கல்வி கற்பிக்கப்படுகிறது.

இன்னோவில் வழங்கப்படும் பெரும்பாலான படிப்புகள் தபால் வழி மற்றும் நேரடிக் கல்வி என 2 முறைகளில் வழங்கப்படுவதாகவும், இதுமட்டுமின்றி முறையான பயிற்சி, திட்டப் பணிகள் மற்றும் பணியிடப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுவதாகவும் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :