முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு நாளை நிறைவு

சென்னை| Webdunia| Last Modified செவ்வாய், 28 ஜூலை 2009 (17:11 IST)
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 161-க்கு கீழ் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 65 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.

இதேபோல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கட்-ஆஃப் மதிப்பெண் 154.50 முதல் கடைசி கட் ஆப் மதிப்பெண் வரை பெற்ற அனைத்து தொழிற்பிரிவு மாணவர்களும் அழைக்கப்படுகின்றனர். இந்த கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள 1,200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பொதுப் பிரிவு, தொழிற்பிரிவு மாணவர்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு குறித்த விரிவான அட்டவணை annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :