முடியாதவ‌ர்களா‌ல் முடி‌ந்த சாதனை

Webdunia|
க‌ண் பா‌ர்வை இ‌ல்லாததா‌ல் பா‌ர்‌‌க்க முடியாத மாணவ‌ன் வரலா‌ற்று‌ப் பாட‌த்‌திலு‌ம், பேச, கே‌‌ட்க முடியாத மாணவ‌ன் சந்தையியல் மற்றும் விற்பனையியல் பாடத்திலு‌ம் மா‌நில‌த்‌திலேயே முத‌ல் இட‌த்தை‌ப் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

திருவண்ணாமலை கல் நகரை சேர்ந்தவர் விக்ரமன் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கோவர்த்தனன். பிறவியிலேயே கண்பார்வையை இழந்த இவர் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாணவர் கோவர்த்தனன் வரலாறு பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் அரசியல் அறிவியல் பாடத்தில் 190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் - 182, ஆங்கிலம் - 166, புவியியல் - 189, வரலாறு - 197, பொருளாதாரம் - 190, அரசியல் அறிவியல் - 190. அவர் மொ‌த்தமாக 1,114 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

வரலாறு பாடத்தில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ள மாணவர் கோவர்த்தனன், உல‌கிலேயே ‌சிற‌ந்த வழ‌க்க‌றிஞராக ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறா‌ர். அத‌ற்கு அர‌சி‌ன் உத‌வியையு‌ம் நாட உ‌ள்ளா‌ர்.
சந்தையியல் மற்றும் விற்பனையியல் பாடத்தில் மதுரை தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவர் வின்சென்ட் 200-க்கு, 199 மார்க் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இந்த சாதனை படைத்த வின்சென்ட்டுக்கு, காது கேட்காது, வாய் பேச முடியாது.

இந்த மாணவரின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ரவி கூறுகை‌யி‌ல், மாணவர் வின்சென்ட், திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர். அவருடைய தந்தை பெயர் வேதமாணிக்கம். கூலி தொழிலாளி. வின்சென்டுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. வறுமை காரணமாக தனது படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக வின்சென்ட் மதுரை அழகப்பன் நகரில் உள்ள அரசு பார்வையற்றோர் விடுதியில் தங்கி படித்து வந்தார். அங்கு அவருக்கு உணவும், பாடபுத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி சார்பில் உடை கொடுக்கப்பட்டது.
வின்சென்ட், படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சாதனை படைத்துள்ளார். சென்னையில் நடந்த மாநில அளவிலான உடல் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதை தவிர ஓவியம் வரைவதிலும் அவர் படுகெட்டியானவர். ஒருவரை பார்த்தவுடன் அவரை அப்படியே ஓவியம் வரைந்து விடுவார். அவர் பி.காம் படிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய பெற்றோருக்கு வசதி இல்லை. அதனால் அவ‌ர் அர‌சி‌ன் உத‌‌வியை எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌ர் எ‌ன்று கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :