மாநில மொழியில் ரயில்வே தேர்வுகள்: மம்தா பானர்ஜி

கொல்கட்டா| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
ரயில்வே பணிக்கு ஆட்தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளை, இனி மாநில மொழியிலேயே நடத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ரயில்வே துறைக்கான எழுத்து தேர்வுகளின் கேள்வி தாள்கள் இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டன. இனி அவை உருது மொழி உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் உருவாக்கப்படும் என்றார்.
மேலும், அஜ்மீர் தர்காவுக்கு செல்லும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள ஷீல்டா நகரில் இருந்து அஜ்மீருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்றும், வரும் 12ஆம் தேதி முதல் அந்த ரயில் இயங்கும் என்றும் மம்தா அறிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :