மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

புவனேஸ்வர்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிக்க நினைக்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், மருத்துவம், பல் மருத்துவம் அல்லது நர்சிங் கல்லூரிகளில் அதிக இடங்களை ஒதுக்குவதற்காக விண்ணப்பிப்போர் சுகாதார அமைச்சகத்தை நேரிடையாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ அணுகவேண்டிய அவசியம் இல்லை.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு தானாகவே ஒப்புதல் கிடைத்துவிடும். பணம் கொடுத்து காரியத்தை சாதிக்க நினைக்கும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :