ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌சிற‌ப்பு க‌ட்டண‌ம் ர‌த்து

செ‌ன்னை| Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:58 IST)
ஆறா‌ம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 இலட்சம் மாணவ- மாணவியர் செலுத்தி வந்த சிறப்புக் கட்டணத்தையும், அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ- மாணவியர்கள் செலுத்தி வந்த சிறப்புக் கட்டணத்தையும் த‌மிழக அரசு ரத்து செ‌ய்துள்ளத

2009-10ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டப் பேரவையில் இன்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அ‌தி‌ல் கூ‌ற‌ப்ப‌ட்டிரு‌ப்பதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில், பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கியும், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியும், தேவைப்படும் இடங்களில் புதிய ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவித்தும், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தியும், அரசுப் பள்ளிகளில் புகட்டப்படும் கல்வியின் தரத்தை உயர்த்திட அனைத்து முயற்சிகளையும்இந்த அரசு எடுத்துள்ளது.

வரும் கல்வியாண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும்.

நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் செயல்வழிக் கல்விமுறையைப் பல மாநிலங்களும் பின்பற்றத் துவங்கியுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தைத் தமிழகம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது எ‌ன்று‌ம் கடந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் கீ‌ழ் ரூபா‌ய் 2,338 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.
336 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டு, 1,577 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. 2001-2002 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த, தொடக்கக் கல்வியில் இடைநிற்போர் விழுக்காடு 2007-2008 ஆம் ஆண்டில் 1.23 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2001-2002 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த நடுநிலைக் கல்வியில் இடைநிற்போர் விழுக்காடு, 2007-2008 ஆம் ஆண்டில் 1.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :