பொறியியல் 2ஆம் ஆண்டு சேர்க்கை: ஜூலை 10இல் கலந்தாய்வு

காரைக்குடி| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
பொறியியல் கல்லூரிகளில் பி.இ. 2ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி காரைக்குடியில் துவங்குகிறது.

தமிழகத்தில் 349 பொறியியல் கல்லூரிகளில் 2ஆம் ஆண்டு சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. இதற்காக பி.எஸ்.சி. கணிதம், பட்டயப் படிப்பு முடித்த 20,235 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதில் கல்லூரிகளுக்கு தலா 10% என்ற அடிப்படையில் 15,252 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதையடுத்து வரும் 10ஆம் தேதி காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
கலந்தாய்விற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் ரேங்க் பட்டியல் அழகப்பா பொறியியல் கல்லூரியின் இணையதளத்தில் (accet.net) இன்று (ஜூலை 6) வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் நாட்களின் போதும் அன்றைய காலிப் பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என மாணவர் சேர்க்கைச் செயலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :