புதிய சம்பள முறையை ஏற்பதாக ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அறிவிப்பு

புதுடெல்லி| Webdunia| Last Modified சனி, 24 அக்டோபர் 2009 (18:26 IST)
மத்திய அரசின் புதிய சம்பள முறையை ஏற்றுக் கொள்வதாக அனைந்திந்திய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. எனினும், மத்திய அரசு அறிவித்த சில விதிமுறைகள் பற்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் இன்று நடந்த அனைத்திந்திய ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில், நாட்டில் உள்ள 7 ஐ.ஐ.டி. நிறுவனங்களின் நலன் கருதி அதில் பணியாற்றும் பேராசிரியர்கள் புதிய சம்பள முறையை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பின் தலைவரும் பேராசிரியருமான எம்.தேன்மொழி செய்தியாளர்களிடம் கூறினார்.
எனினும், அரசு அறிவித்துள்ள பல்வேறு புதிய விதிகளில், பேராசிரியர்களுக்கு உடன்பாடு இல்லாதவை குறித்து மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஐ.ஐ.டி ஆட்சிக் குழுவினருடன் தொடர்ந்து பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :