பிளஸ்-2 வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு வேண்டும்

கரூர்| Webdunia|
பிளஸ்-2 வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக கரூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்தில், 6வது ஊதியக்குழுவில் முதுநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்தித் தரக் கோருவது, மேல்நிலைக் கல்விக்கு என தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதில் மேலும் படிக்கவும் :