பிளஸ் 2 தேர்வு மறுகூ‌ட்ட‌லி‌ல் ஊ‌த்த‌ங்கரை மாணவ‌‌‌ருக்கு 1,184 ம‌தி‌ப்பெ‌ண்

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 2 ஜூலை 2009 (12:53 IST)
பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில் ஊத்தங்கரை மாணவர் எஸ்.பாலமுருகன் 1,184 மதிப்பெண் பெற்று‌ள்ளார். இது மாநில அளவில் முதலிடம் பிடித்த 4 மாணவர்களை விட ஒரு மதிப்பெண் கூடுதல் ஆகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் எஸ்.பாலமுருகன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்றிருந்தார். தேர்வு நன்றாக எழுதியும் மதிப்பெண் குறைந்த அளவே கிடைத்திருப்பதாக கருதினார்.

எனவே மறுகூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் இவர் விண்ணப்பித்தார். இதில் மாணவர் பாலமுருகனுக்கு தமிழில் கூடுதலாக 8 ம‌தி‌ப்பெ‌ண் கிடைத்து‌ள்ளது. இதனால் அவருக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண் 195 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, பாலமுருகன் பெற்ற மொத்த மதிப்பெண் 1,184 ஆக அதிகரித்து விட்டது. மாநில அளவில் முதலிடத்தை பிடித்த 4 பேர் பெற்ற மதிப்பெண்களை விட (1,183) ஒரு மார்க் கூடுதல் ஆகும்.
ரேங்க பட்டியலை மாற்ற முடியாது: இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகை‌யி‌ல், முதன்முதலில் விடைத்தாள் திருத்தும் போது கிடைத்த மதிப்பெண்களை கொண்டுதான் மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் ரேங்க் பட்டியல் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.
மறுமதிப்பீடு, மறுகூட்டலில் உள்ள மதிப்பெண்கள் ரேங்க் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால், மருத்துவம், பொ‌றி‌யிய‌ல் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கூடுதல் மதிப்பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் எ‌ன்றா‌ர்.
தனது வெ‌ற்‌றி கு‌றி‌த்து மாணவர் எஸ்.பாலமுருகன் கூறுகை‌யி‌ல், பிளஸ் 2 தேர்வில் 1,184 மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

இந்த ம‌தி‌ப்பெ‌ண்ணை முதலிலேயே எதிர்பார்த்தாலும், மறுகூட்டல் மூலம் எனது வெற்றி உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் இந்த வெற்றி முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தால் முதல்வரின் பாராட்டு கிடைத்திருக்கும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த மாணவ‌‌ர் பாலமுருக‌ன், வெற்றி தாமதமாக கிடைத்திருந்தாலும் அதற்காக மனநிறைவடைகிறேன் எ‌ன்றா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :