பிளஸ் 2 துணை தேர்வு: தட்கல் முறை‌யி‌ல் ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌க்க 12ஆ‌ம் தே‌தி கடை‌சி நா‌ள்

செ‌ன்னை| Webdunia|
பிள‌ஸ் 2 தே‌ர்வு‌க்கு 'த‌்க‌லமுறை‌'யி‌லவிண்ணப்பிக்க வரு‌ம் 12ஆ‌மதே‌தி கடை‌சி நா‌ளஎன‌்று‌ அரசதே‌ர்வுக‌ளஇய‌க்க‌கமதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுதொ‌ட‌ர்பாஅரசு தேர்வுகள் இயக்கக‌வெ‌ளி‌யி‌ட்டு‌ள்செய்திக்குறிப்பில், பிளஸ் 2 தேர்வில் தவறிய மாணவ, மாணவிகளுக்கு ஜூன், ஜூலையில் துணை தேர்வு நடக்கிறது. கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள், 'தட்கல் முறை'யின் கீழ் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பிக்கலாம்.
மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 'தட்கல் முறை'யில் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பாடத்துக்கு ரூ.85 மற்றும் ரூ.1000. இரண்டு பாடங்களுக்கு ரூ.135 மற்றும் ரூ.1000, மூன்று பாடங்களுக்கு ரூ.185 மற்றும் ரூ.1000 என கட்டணம். கட்டணத்தை 'அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6' என்ற பெயருக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
ஏற்கனவே கட்டணம் செலுத்தி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தனித்தேர்வர்கள், சிறப்பு கட்டணமாக ரூ.1,000 மட்டும் டிடி எடுத்து அனுப்பினால் போதும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக குறிப்பாணையை மனுவுடன் இணைக்க வேண்டும்.

'தத்கல் முறை'யின் கீழ் விண்ணப்பிக்க, 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். சென்னை கல்லூரி சாலையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகம், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பங்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் 12ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அப்போதே தேர்வு மையத்தை குறிப்பிட்டு ஹால் டிக்கெட் வழங்கப்படும் எ‌ன்றஅரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :