பிளஸ் 2 துணை தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்

சென்னை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் 20ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதி ஒன்று முதல் மூன்று பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, 22ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
மார்ச்-2009 பிளஸ் 2 தேர்வு அல்லது அதற்கு முந்தைய பருவங்களில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதி ஒன்று முதல் மூன்று பாடங்களில் தோல்வியடைந்து இப்போது சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு வினியோக மையத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மதரசா-ஐ-ஆசாம் மேனிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெறலாம். ஹால் டிக்கெட்டில் அவர்களுக்குரிய பதிவெண் மற்றும் தேர்வு மையம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :