பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ஆம் தேதி வரை அவகாசம்

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
பிள‌ஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக நடத்தப்படும் த‌னி‌த்தே‌ர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 10ஆ‌ம் தேதி வரை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அரசு தேர்வுகள் துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தனித் தேர்வு நடக்கிறது. தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அந்தந்த அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் 10ஆம் தேதி வரை தனித் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :