பிளஸ் 2 உடனடித் தேர்வு: 48% மாணவர்கள் தேர்ச்சி

சென்னை| Webdunia| Last Modified புதன், 29 ஜூலை 2009 (13:00 IST)
பிளஸ் 2 உடனடித் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 48% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் இறுதியில் உடனடித்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1,12,922 பேர் பதிவு செய்திருந்தனர். 1,01,779 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களில் 65,946 பேர் தேர்வு எழுதினர். இதில் 40,460 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 61.4 சதவீதமாகும்.
இரண்டு பாடத்தில் தோல்வியடைந்தவர்களில் 25,985 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,537 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 29 சதவீதமாகும்.

மூன்று பாடங்களில் தோல்வியடைந்தவர்களில் 30,848 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,078 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 11 சதவீதமாகும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 49 ஆயிரத்து 75 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :