பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

செனனை| Webdunia| Last Modified வெள்ளி, 24 ஜூலை 2009 (12:14 IST)
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும், 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியுற்ற ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 927 மாணவர்களும், கடந்த ஏப்ரலில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 642 மாணவர்களும் உடனடித் தேர்வை எழுதினர்.

தற்போது இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டன. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என்பதால் வரும் 27 அல்லது 28ஆம் தேதியில் பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :