பிரெஞ்ச், ஜப்பானிய மொழி பயில சான்றிதழ் படிப்பு அறிமுகம்

புதுச்சேரி| Webdunia| Last Modified வியாழன், 9 ஜூலை 2009 (15:14 IST)
முதுநிலை படிப்புக்கான காஞ்சி மாமுனிவர் அரசு மையத்தில் பிரெஞ்ச், ஜப்பான் மொழிப் பாடங்களுக்கான சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படிப்புகளில் அடுத்த மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த கல்வித்துறை அமைச்சர் ஷாஜகான், பிரெஞ்ச், ஜப்பான் மொழிப் பாடங்களை பயிற்றுவிக்கத் திறமையான ஆசிரியர்களை வரவழைக்க சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுடன் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

காஞ்சி மாமுனிவர் அரசு மையத்தில் சீன, ஸ்பெயின் மொழிப் பாடங்களில் பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருவதையும் அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :