பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.ஐ.டி. இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றக் கருத்தரங்கு

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (17:46 IST)
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கம் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஐசி&எஸ்.ஆர் உள்ளரங்கத்தில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் லார்டு ஜூலியன் ஹன்ட், ‘பருவநிலை மாற்றத்திற்கான அரசியலும், கொள்கைகளும’ என்ற தலைப்பில் விரிவாகப் பேச உள்ளார்.

உலகம் முழுவதும் பருவநிலை எவ்வாறு மாறுகிறது என்பது பற்றியும், இதன் காரணமாக நமது காலத்தில் ஏற்படும் அறிவியல் சவால்கள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என பிரிட்டிஷ் கவுன்சில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :