பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலப் பயிற்சி

சென்னை| Webdunia|
சென்னையில் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் ஆங்கிலத் திறனை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்ற தரத்திலான பயிற்சியை பிரிட்டிஷ் கவுன்சில் அளிக்க உள்ளது. அதற்காக இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரம் ஆங்கிலத் தேர்வு நடத்தப்படும்.

இதன் பின்னர் மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்ப வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 வரையிலான காலத்தில் நடத்தப்படும் ஒரு 2 மணி நேர வகுப்பு அல்லது வார விடுமுறை நாட்களில் காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலான காலத்தில் நடத்தப்படும் ஒரு 3 மணி நேர வகுப்பில் பயிற்சி பெறலாம்.
இதுதொடர்பாக மேலும் விவரங்கள் வேண்டுவோர் 044-42050683 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :