பிப்ரவரியில் +2 செய்முறை தேர்வு

Webdunia|
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக் குறிப்பில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகின்றன. 46 பாடங்களுக்கு 2 கட்டமாக தேர்வு நடக்கும்.

சென்னையில் மட்டும் 403 பள்ளிகளில் படிக்கும் 37,375 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர். முதல் கட்டமாக 207 பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமிருக்கும் 196 பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :