பாரதியார் பல்கலை.யில் தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

கோவை| Webdunia| Last Modified புதன், 30 செப்டம்பர் 2009 (16:05 IST)
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயப்படிப்புகளின் 2009-10ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள மாணவர்கள் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், உரிய கட்டணம் செலுத்தி தொலைநிலைக் கல்வி மையங்களில் நேரடிச் சேர்க்கை பெறலாம் என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :