பள்ளிக்கல்வித் துறையில் 394 இளநிலை உதவியாளர்கள் நியமனம்

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
பள்ளிக்கல்வித் துறையில் 394 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு, கடந்த 2007இல் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில், 415 பேர் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று (ஜூன் 9) நடந்தது. மொத்தம் 415 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், அவர்களில் 394 பேர் மட்டுமே கலந்தாய்வுக்கு வந்தனர்.
பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குற்றாலிங்கம், 394 இளநிலை உதவியாளர்களுக்கும் பணிநியமனம் ஆணையை வழங்கியதாகவும், கலந்தாய்வுக்கு வரமுடியாதவர்களுக்கு தபால் மூலம் பணிநியமன ஆணை அனுபப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :