பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு முடிவுகள் 6ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யீடு

சென்னை| Webdunia| Last Modified செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:43 IST)
பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் தே‌ர்வு முடிவுக‌ள் வரு‌ம் 6ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெ‌ற்ற இந்த தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்த, பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டது.

மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி முடிவடை‌ந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த வாரம் முடிவடை‌ந்தது.
இதையடுத்து தேர்வு முடிவுகள் 6ஆம் தேதி மதியத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணைய தளத்தில் வெ‌ளி‌‌யிட‌ப்படு‌கிறது. தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களில், அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :