நாளை பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வு: இணையதளத்தில் ரேங்க் பட்டியல் வெளியீடு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் ரேங்க் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் 2ஆம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பொறியியல் சிறப்பு துணை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்டு உத்தரியராஜ் கூறுகையில், பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வுக்கு சுமார் 1,200 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் அகடமி பிரிவில் 800 விண்ணப்பங்களும், தொழிற்பிரிவில் 160 விண்ணப்பங்களும் தகுதி பெற்றுள்ளன.
துணை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்டவை annauniv.edu என்ற இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :