சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் 4-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பு தடை செய்வதற்கு முன் வரை தேர்ச்சி பெற்ற 1,199 பேர் உள்பட முதுநிலை மற்றும் இளநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் மொத்தம் 15,650 பேர் பட்டம் பெறுகின்றனர்.