நாளையுட‌ன் முடி‌‌கிறது 10ஆம் வகுப்பு தேர்வு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:41 IST)
கடந்த மாதம் தொடங்கிய 10ஆம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் மெட்ரிக் தேர்வுகள் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கின. 10ஆம் வகுப்பு தேர்வு 25ஆம் தேதி தொடங்கியது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 6,541 பள்ளிகளைச் சேர்ந்த 8,42,350 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 59,125 பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை 37,779 பேர் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 7,522 மாணவர்களும், 7,811 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 2,788 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு நாளையுடன் முடிகிறது. விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :