நாடு முழுவதும் கணிதம், அறிவியலுக்கு ஒரே பாடத்திட்டம்: கபில் சிபல் யோசனை

புதுடெல்லி| Webdunia| Last Modified செவ்வாய், 25 ஆகஸ்ட் 2009 (15:54 IST)
நாடு முழுவதும் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தொழிற்கல்வி படிப்புகளுக்கபொது நுழைவுத்தேர்வு நடத்த முடியும் அமைச்சர் கபில் சிபல் யோசனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மேல்நிலைக் கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், தற்போது அறிவுசார் விடயங்களைப் பெற்று வரும் நாம், விரைவில் அறிவுசார் விடயங்களை மற்றவர்களுக்கு அளிக்கும் வகையிலான மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நாடு முழுவதும் தொழிற்படிப்பு கல்விகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கணிதம், அறிவியல் பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒருமித்த பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதனால் கல்வியின் தரமும் சமமாக இருக்கும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :