தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 இறுதிநாள்

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 30 ஜூலை 2009 (10:17 IST)
ஓவியம், தையல் போன்ற படிப்புகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ஆம் தேதி இறுதி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் மனோகரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஓவியம், தையல், இசை, அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு ஆகிய படிப்புகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகின்றன.
இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘கூடுதல் செயலாளர் (தொழில்நுட்பத் தேர்வுகள்), அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், கல்லூரிச் சாலை, சென்னை-6’ என்ற முகவரியில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :