தொழிற்பிரிவு கலந்தாய்வில் அரசு இடங்கள் நிரம்பின

சென்னை| Webdunia| Last Modified புதன், 8 ஜூலை 2009 (14:07 IST)
அரசு மற்றுமஅரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் தொழிற் பிரிவினருக்கு உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 3,404 இடங்கள் தொழிற்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நேற்று வரை 1,598 இடங்கள் நிரம்பிவிட்டன. சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,806 இடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன. பொறியியல் படிப்பில் சேருவதற்கு தொழிற்பிரிவில் 5,217 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 6ஆம் தேதி துவங்கியது. கடந்த 2 தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் 1,798 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 198 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தொழிற்பிரிவுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில், சுமார் ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்பிரிவுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு பின்னர் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :