தே‌ர்வு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் மாணவ‌ர்க‌ளி‌ன் கவன‌த்‌தி‌ற்கு

webdunia photoWD
விடிய, விடிய கண்விழித்துப் படிப்பது நல்லதல்ல. 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். தே‌ர்வு நா‌ட்க‌ளிலு‌ம் குறை‌ந்த ப‌ட்ச‌ம் 6 ம‌ணி நேர‌ம் தூ‌ங்‌கி‌விடு‌ங்க‌ள்.

இரவு அ‌திக நேர‌ம் க‌ண்‌வி‌ழி‌த்து‌ப் படி‌ப்பதை ‌விட அ‌திகாலை‌யி‌ல் படி‌ப்பது ‌சிற‌ந்தது.

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தூ‌ங்குவது ந‌ல்ல‌து.

ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்கக் கூடாது. 45 நி‌மிடங்களுக்கு ஒரு முறை 5 முதல் 10 நிமிட இடைவெளியுடன் பாடங்களைப் படிக்கலாம்.

தொட‌ர்‌ந்து படி‌ப்பதை ‌விட இடையே ஏதாவது ‌விளையா‌ட்டு அ‌ல்லது ந‌ண்ப‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌ப்பது‌ம் மூளையை களை‌ப்படையாம‌ல் செ‌ய்யு‌ம்.

தேர்வு முடியும் வரை மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் தொலை‌க்கா‌ட்‌சி‌ப் பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்கவு‌ம்.

தே‌ர்‌வி‌ன் போது உணவு முறை...

தேர்வு துவ‌ங்கு‌ம் இர‌ண்டு நா‌‌ட்க‌ள் மு‌ன்‌பிரு‌ந்தே வெ‌ளி‌யி‌ல் சா‌ப்‌பிடுவதை ‌நிறு‌த்‌தி ‌விடு‌ங்க‌ள். சுகாதார‌மாக ‌வீ‌ட்டி‌ல் சமை‌க்க‌ப்ப‌ட்ட உணவையே சா‌ப்‌பிடு‌ங்க‌ள்.

உ‌டலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளாத எ‌ந்த உணவையு‌ம் ஆசை‌க்காக உ‌ண்ண வே‌ண்டா‌ம்.

webdunia photoWD
படி‌ப்பு படி‌ப்பு எ‌ன்று உணவை த‌‌ள்‌ளி‌ப்போடுவதோ, சா‌ப்‌பிடாம‌ல் இரு‌ப்பதோ அ‌ல்லது அ‌ல்ல. தே‌ர்வு எழுத‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு ந‌ன்கு சா‌ப்‌பி‌ட்டு ‌வி‌ட்டு செ‌ல்ல வே‌ண்டு‌ம். வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லவே‌க் கூடாது.

காலை‌‌யில் இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் இரண்டு சாப்பிட்டு, பழச்சாறு அல்லது பழங்கள் சில சாப்பிட வேண்டும். மதியம் மற்றும் இரவில் சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம்

தேர்வு முடியும் வரை அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். ஏனெ‌னி‌ல் அசைவ‌ம் ‌ஜீர‌ணி‌க்க கடினமாகவு‌ம், ந‌ஞ்சாக மாறு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திகமாகவு‌ம் இரு‌‌ப்பதா‌ல் த‌வி‌ர்‌‌ப்பது நல‌ம்.

தே‌ர்வு அறை‌க்கு செ‌ல்லு‌ம் மு‌ன் ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌த்து‌வி‌ட்டு செ‌ல்வது நல‌ம். தே‌ர்வு முடி‌ந்து ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் அ‌திகமான த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். தே‌ர்வு செ‌ல்லு‌ம் போது அ‌திகமான த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வே‌ண்டா‌ம்.

Webdunia|
பொது‌த் தே‌ர்வுக‌ள் துவ‌ங்‌‌கி‌வி‌ட்டன. இ‌னி படி‌ப்பது ஒ‌ன்றே முழு நேர‌க் கடமை எ‌ன்று இரு‌க்கு‌ம் மாணா‌க்க‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புகளை சொ‌ல்ல நா‌ங்க‌ள் கடமை‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌ம்.
தே‌ர்வு‌க்கு படி‌க்கு‌ம் போது...தூ‌க்க‌ம், சா‌ப்‌பாடு எ‌ல்லாவ‌ற்றையு‌ம் த‌வி‌ர்‌த்து படி‌ப்பது ந‌ல்ல முறை அ‌ல்ல. ச‌ரியான சமய‌த்‌தி‌ல் உ‌ண்டு, ச‌ரியாக தூ‌ங்‌கி எழுவது அவ‌சிய‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :