தேர்வு மையங்களில் செ‌ல்பே‌சி‌க்கு தடை

Webdunia| Last Modified வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (12:41 IST)
+2 பொது‌த் தே‌ர்வு நட‌க்கு‌ம் தே‌ர்வு மைய‌ங்க‌ளி‌ல் செ‌‌ல்பே‌சிகளு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கடுமையான க‌ட்டு‌ப்பாடுகளு‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

தமிழகத்தில் வரு‌ம் மா‌ர்‌ச் மாத‌ம் 2ஆ‌ம் தே‌தி +2 பொதுத்தேர்வு துவ‌ங்க‌ உ‌ள்ளது. 2ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் துறை இயக்ககம் பல்வேறு உத்தரவுகளை‌ப் பிறப்பித்துள்ளது.
அ‌தி‌ல், 400 மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுதும் மையங்களுக்கு 2 துறை அலுவலர்கள், 2 முதன்மை கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டும்.

கடந்த தேர்வுகளின்போது வழங்கப்பட்ட விடைத்தாள்கள் மீதமிருந்தால், அவற்றை முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இந்த ஆண்டு புதிதாக அச்சிடப்பட்ட விடைத்தாள்களையே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
வினாத்தாள் கட்டுகளை சரிபார்த்து, தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையங்களுக்கு துறை அலுவலர்கள் எடுத்துச்செல்ல வேண்டும்.

தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 9.30 மணிக்குள் உரிய வினாத்தாள், விடைத்தாள்களுடன் தேர்வு அறைக்குள் சென்றுவிட வேண்டும்.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி கண்காணிப்பாளர்களும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது எ‌‌ன்று உ‌த்தரவு பிறப்பித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :