தேசிய அறிவியல் திறனாய்வுத் தேர்வு 2010: மாணவர்களுக்கு அழைப்பு

ஹைதராபாத்| Webdunia| Last Modified திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (16:18 IST)
வரும் 2010ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க 2ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு யுனிஃபைட் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக யுனிஃபைட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 250 மையங்களில் தேசிய அறிவியில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும் 2010 ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்-லைன் மூலமாக செலுத்தலாம்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் unifiedcouncil.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி மாதிரி வினாத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் அதற்குரிய கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. மேலும் இத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘சக்சஸ் சீரிஸ் புக’ என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :