தொ‌ழி‌ற்க‌ல்‌வி தே‌ர்வு‌க்கு ஜூலை 20 முதல் ‌வி‌ண்ண‌ப்ப‌ம்

சென்னை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:42 IST)
தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் தே‌ர்வுகளு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் வரு‌ம் 20ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌வி‌‌னியோ‌கி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அரசு‌த் தே‌ர்வுக‌ள் துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஓ‌விய‌ம், தைய‌ல், இசை, நடன‌ம், அ‌ச்சு‌க்கலை, ‌விவசாய‌ம், கை‌த்த‌றி நெசவு ஆ‌கிய தொ‌ழி‌ல்நு‌ட்ப பாட‌ங்களு‌க்கான தே‌ர்வுக‌ள் நவ‌ம்ப‌ரி‌ல் நடைபெறு‌கிறது. இத‌ற்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் வரு‌ம் 20ஆ‌ம் தே‌தி முத‌ல் ஆக‌ஸ்‌ட் 20ஆ‌ம் தே‌தி வரை வழ‌ங்க‌ப்படு‌கிறது.
பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌‌ள் ஆக‌ஸ்‌ட் 20ஆ‌ம் தே‌‌தி‌க்கு‌ள் கூடுத‌ல் செயல‌ர் (தொ‌‌ழி‌ல் நு‌ட்ப‌ம்) அரசு தே‌ர்வுக‌ள் இய‌க்கக‌ம், செ‌ன்னை-6 எ‌ன்ற முக‌வ‌ரி‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம். தே‌ர்வு க‌ட்டண‌ங்களை கருவூல‌ம் மூல‌‌ம் செலு‌த்‌த வே‌ண்டு‌ம்.
சா‌ன்‌றித‌ழ்‌க‌ள், தே‌ர்வு முடிவுக‌ள், ஹா‌ல் டி‌க்கெ‌ட் ஆ‌கியவை ‌வீ‌ட்டு முகவ‌ரி‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்பட மா‌ட்டாது. நே‌‌ரி‌ல் பெற முடியாதவ‌ர்க‌ள், ரூ.30‌க்கு அ‌ஞ்ச‌ல்தலை ஒ‌‌ட்டிய சுய முகவரி எழுதிய உறை ஒ‌ன்றை தே‌ர்வு மையக் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ரிட‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றும் கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :