தமிழ் நெட் மாநாடு: ஜெர்மனியில் அக்டோபர் 23இல் துவக்கம்

தஞ்சாவூர்| Webdunia| Last Modified செவ்வாய், 28 ஜூலை 2009 (17:03 IST)
ஜெர்மனியில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி தமிழ் நெட் மாநாடு துவங்கும் என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தமிழ் கணினி வல்லுனர்கள், அறிஞர்கள் சந்திக்க உள்ள எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்க இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும், அக்டோபர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியாவில் வசிக்கும் தமிழர்கள் ஐரோப்பிய மொழிகளிலேயே கணினியைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தமிழில் கணினியைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் ராஜேந்திரன் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :