தமிழக ஆளுநருடன் மனிதநேய மாணவர்கள் சந்திப்பு

FILE

அப்போது மனிதநேய அறக்கட்டளை மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பவரான முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அபுல்ஹாசன், மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி, துணைத் தலைவர் வெற்றி துரைசாமி, பயிற்சி இயக்குனர் வாவூசி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோரும் இருந்தனர்.

கடந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வுகளில் மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 43 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2011ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ்ஸ் பிரிலிமினரி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

மனிதநேய அறக்கட்டளை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்த 16,800 மாணவர்களில் 12,140 பேர் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு அவர்களில் 1,500 பேர் இறுதியாக பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பயிற்சி இயக்குனர் வாவூசி தெரிவித்துள்ளார்.

Webdunia|
சைதை சா. துரைசாமி நடத்தும் மனிதநேய ஐஏஎஸ் அகாடமியில் பயின்று, 2009ஆம் ஆண்டின் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெறுவது தொடர்பாக விவரங்களைப் பெற 044-24358373, 9940670110, 9840106162 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :