தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் மின்-ஆளுமை

தஞ்சாவூர்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் மின்-ஆளுமை (E-Governance) நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மின்-ஆளுமைப் பணிகளைப் பராமரிக்கும் பொறுப்பை நேஷனல் இன்ஃபார்மேட்டிக்ஸ் சென்டர் (என்.ஐ.சி.) ஏற்றுள்ளது.

இதுகுறித்து என்.ஐ.சி. தொழில்நுட்ப இயக்குனர் சக்கரபாணி பேசுகையில், மின்-ஆளுமை நிறுவப்பட்டதன் மூலம் பல்கலையின் வழக்கமான பணிகள் எளிதாக்கப்பட்டதுடன், ஆவணப் பராமரிப்பும் சுலபமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்பையும் மின்-ஆளுமை மூலம் வலுப்படுத்த முடியும் என்று சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :